நோயால் உயிரிழந்த 67 வயது முதியவர்..பிணவறையில் நடந்த பயங்கரம்- அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!
மருத்துவமனையின் பிணவறையில் 67 வயது முதியவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கண்ணூர்
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பச்சபொய்க்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் பவித்ரன். இவருக்கு நுரையீரல் நோய்ப் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டுள்ளார்.
இதனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தினர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து வந்துள்ளது. இதனால் அவர் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன் மூலம் மருத்துவ செலவுகள் அதிகரித்ததால் குடும்ப உறுப்பினர் அனைவரும் சேர்ந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.அப்போது வென்டிலேட்டர் ஆதரவு இல்லாமல் பவித்ரன் உயிர் பிழைப்பது கடினம் என்றும், அதை அகற்றிய பத்து நிமிடங்களில் அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பிணவறை
ஆனால் இதையும் மீறி டிஸ்சார்ஜ் செய்து வென்டிலேட்டரரை அகற்றியுள்ளனர். இதனால் உடலில் அசைவு ஏதும் இல்லாததால் பவித்ரன் உயிரிழ்ந்துவிட்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஊழியர்கள் பிணவறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு இறுதிச் சடங்குகளுக்குத் ஏற்பாடுகளைச் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து பவித்ரனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக ஊழியர்கள் பிணவறைக்கு வந்துள்ளனர். அப்போது பவித்ரனின் கை அசைவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக வந்த அவர்கள் பவித்ரனை பரிசோதித்ததில் ரத்த அழுத்தம் சீராக இருந்தது. மேலும் அவரது பெயரை அழைத்த போது அவர் கண் திறந்து பார்த்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.