உயிரை பறிக்கும் சாம்பி டிரக், பதிவான முதல் இறப்பு - அச்சத்தில் மக்கள்!

Death England
By Vinothini May 25, 2023 05:54 PM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 இங்கிலாந்தில் ஸைலாஸைன் எனப்படும் விலங்குகளுக்கு பயன்படுத்தும் மருந்தை பயன்படுத்தி ஒருவர் இறந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பு

இங்கிலாந்தில், வெஸ்ட் மிட்லாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான கார்ல் வார்பர்டன் என்பவர்.

man-dead-using-zombie-drug-in-england

இவர் கடந்த 2022-ல் தன்னுடைய வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவர் சட்ட விரோத மருந்துகளைப் பயன்படுத்தியதால் இறந்ததாக தெரியவந்தது.

மேலும், அவருடைய உடலைப் பரிசோதனை செய்ததில், ஹெராயின், ஃபெண்டானில் மற்றும் கோகோயின் போன்றவை கலந்திருப்பதாக தெரியவந்தது.

அதனோடு ஸைலாஸைன் (xylazine) என்ற மருந்தும் கலந்திருப்பது தெரிந்தது.

பொதுவாக இந்த மருந்து பெரிய விலங்கினங்களுக்கு மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மனிதர்கள் இதனை பயன்படுத்தினால் இதயத் துடிப்பைக் குறைத்து, அல்சர் போன்ற பெரிய காயங்களை ஏற்படுத்தும் மேலும் அது சருமத்தையே தின்றுவிடும் என்று கூறப்படுகிறது.

சாம்பி டிரக்

இதனை தொடர்ந்து, இறந்தவரின் இறப்புச் சான்றிதழில், "இவர் ஹெராயின் வாங்கி இருக்கலாம், ஆனால், அதில் ஸைலாஸைன் மற்றும் ஃபெண்டானில் கலந்திருப்பது தெரிய வாய்ப்பில்லை" என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 2000-களின் தொடக்கத்தில் இந்த மருந்து சட்டவிரோதமாகச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.

இதனை ஆபத்தாக கருதி அமெரிக்கா இதற்கு தடை விதித்தது. மேலும், இந்த மருந்தை சாம்பி டிரக் என்று குறிப்பிடுவர்.

இது இங்கிலாந்து மருந்து விநியோகத்தில் ஸைலாஸைன் நுழைவதைக் குறிக்கிறது என்று பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்