ரூ.15 லட்சத்தில் தனி நாட்டையே உருவாக்கிய நபர் - எப்படி, யார் இவர்?
ஒருவர், தான் தங்குவதற்காக தனது சொந்த நாட்டையே உருவாக்கியுள்ளார்.
தனி நாடு
ஸ்லோஜமஸ்தான் குடியரசு என்ற இந்த நாடு அமெரிக்காவில் அமைந்துள்ளது. இது ராண்டி வில்லியம்ஸ் என்ற நபரால் உருவாக்கப்பட்டுள்ளது. இவர் கலிபோர்னியா பாலைவனத்தில் 11.07 ஏக்கர் காலி நிலத்தை 15,66,920க்கு வாங்கி நாட்டை உருவாக்கி தனி நாடாக அறிவித்துள்ளார்.

இந்த நாடு மெரிக்காவிடமிருந்து சுதந்திரத்தை பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு சொந்த கொடி, பாஸ்போர்ட், நாணயம் மற்றும் தேசிய கீதம் உள்ளது. இங்கு, 500 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட குடிமக்கள்உள்ளனர் மற்றும் 4,500 க்கும் மேற்பட்டோர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
யார் இவர்?
இவர் மற்ற நாடுகளுடன் அரசுரீதியான உறவுகளை கட்டியெழுப்புவதில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். இது ஐக்கிய நாடுகளின் சான்றளிக்கப்பட்ட நாடு அல்ல.

இதன் அதிகாரப்பூர்வ பெயர், "ஸ்லோஜமஸ்தான் மக்கள் குடியரசின் இறையாண்மை தேசத்தின் ஐக்கிய பிரதேசங்கள்" எனக் கூறப்படுகிறது. மேலும், அவரை "ஸ்லோஜாமஸ்தான் சுல்தான்" என்று பிரகடனப்படுத்தியுள்ளார்.