4 கார்கள், ஹெலிகாப்டர் முழுக்க பணத்தோடு தப்பிய ஆப்கானிஸ்தான் அதிபர்
ஆப்கானிஸ்தானில் இருந்து முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி ஒரு ஹெலிகாப்டர் மற்றும் 4 கார்களுடன் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனையடுத்து ஆப்கான் நாட்டின் பெயர் இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி காபூலில் இருந்து தஜிகிஸ்தானுக்கு விமானம் மூலம் தப்பி சென்றார். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இவரின் வெளியேற்றம் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் அஷ்ரப் கனி நான்கு கார் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்தோடு தப்பி சென்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய விதம் வியப்பூட்டும் வகையில் இருந்ததாகவும், அவர் மூட்டை மூட்டையாக பணங்களை அடுக்கியதை நேரில் பார்த்த சாட்சியங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் மக்கள் சொந்த நாட்டை விட்டு வாழ இடம் தேடி அகதிகளாக மற்ற நாட்டுக்கு படையெடுத்து வரும் நிலையில் அதிபர் பணத்துடன் தப்பிய செய்தி நிச்சயம் உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவமாக அமைந்துள்ளது.