உண்மையா காதலிச்சா விஷத்தை குடி - நிரூபிக்க இளைஞர் செய்த செயல்!
காதலை நிரூபிக்க இளைஞர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் பாண்டோ (வயது 22) என்ற இளைஞர், சோனாரி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் காதலில் இருந்தார்.
இருவரும் யாருக்கும் தெரியாமல் சந்தித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் காதலியின் பெற்றோருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, கிருஷ்ணகுமாரை அழைத்து அவரிடம் உண்மையில் காதலிக்கிறாயா என கேள்வி எழுப்பினர்.
இளைஞர் செயல்
உண்மையை நிரூபிக்க கேட்டதும், கிருஷ்ணகுமார் விஷம் குடித்தார். உடல்நிலை மோசமாகிய ا அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கடந்த சில நாட்கள் சிகிச்சையில் இருந்த நிலையில், கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதலியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.