இறுதி சடங்கில் உயிரோடு வந்து நின்ற நபர் - பரபரப்பில் உறவினர்கள்!
இறுதி சடங்கின்போது உயிருடன் வந்து நின்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இறுதி சடங்கு
தெலங்கானா, நவாங்கி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா (40). இவருக்கு விமலா என்கிற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பஷீராபாத்தில் ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த வேலையை விட்டுவிட்டு, தாண்டூர் எனும் இடத்தில் சிமெண்ட் மூட்டை தூக்கும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் வேலை பார்க்கும் ஒருவருடன் எல்லப்பா சேர்ந்து இரவு மது அருந்தியுள்ளார். போதை அதிகமான எல்லப்பா, அங்கேயே பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியுள்ளார்.
அதில், இவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு உடன் வந்த நபர், அங்கிருந்து தப்பியுள்ளார். அவர் விகாராபாத் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு ரயில் வேகமாக வந்து அந்த நபர் மீது மோதியது.
உயிரோடு வந்த நபர்
இதில் உடல் தூக்கி எறியப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே விரைந்த போலீஸார் செல்போன் ஆதாரத்தை வைத்து, இறந்தவர் எல்லப்பா என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். தொடர்ந்து அவரது வீட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து சடலத்தை கொண்டு வந்து உறவினர்கள் வீட்டருகே இறுதிச் சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் எல்லப்பா, மீண்டும் பணிக்காக சிமெண்ட் கடைக்கு சென்றுள்ளார்.
பின் வீட்டிற்கு உயிரோடு இருப்பதாக தகவல் கொடுத்துள்ளார்.
தவறு நடந்தது என கூறி, எல்லப்பா மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் ரயில்வே போலீஸார் மன்னிப்பு கேட்டுள்ளனர்.