4 ஆயிரம் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்த இளம்பெண்; திருமணத்திற்கு தடை - என்ன காரணம்?
இளம்பெண் ஒருவர் கேட்பாரற்று உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்து வருகிறார்.
இறுதிச்சடங்கு
டெல்லி, ஷாஹ்தரா பகுதியைச் சேர்ந்தவர் பூஜா ஷர்மா(26). இவர் கடந்த 2 வருடங்களாக மருத்துவமனைகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் பல உடல்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், 30 வயதான எனது மூத்த சகோதரர் ஒரு சிறிய சண்டையில் என் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செய்தியைக் கேட்டதும், என் தந்தை, கோமா நிலைக்கு சென்றார்.
தனது ஆரம்பத்தில் குடும்பங்கள் அல்லது இருப்பிடம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைப் பெற நான் காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தொடர்புகொண்டேன். அதன் பின், இப்போது காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகள், உரிமை கோரப்படாத உடல்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் என்னைத் தொடர்புகொள்கின்றன.
பெண் தகவல்
இறுதிச்சடங்குகள் செய்ய சுமார் 1,000 முதல் 1,200 ரூபாய் வரை ஆகும். நான் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் தங்கியிருக்கிறேன். எனது தந்தை கோமாவில் இருந்து விடுபட்டு தற்போது டெல்லி மெட்ரோவில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணிபுரிகிறார். எனது தாத்தாவின் ஓய்வூதியத்தில், நான் இவற்றை செய்து வருகிறேன்.
இந்த பணிகளை செய்வதற்காக பல சவால்களை எதிர்கொண்டு வருகிறேன். நான் செய்யும் வேலையை பலர் தடையாகப் பார்க்கிறார்கள். என்னை சந்திக்க விடாமல் என் நண்பர்களை அவர்களின் குடும்பத்தினர் தடுக்கின்றனர். மேலும், இந்த பணிகளை செய்வதால் எனது திருமணத்திற்கும் பல தடைகள் வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில், குடும்பம் அல்லது உரிமை கோரப்படாமல் இருந்த சுமார் 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.