ஆணாக தூங்கிய நபர் பெண்ணாக எழுந்ததால் அதிர்ச்சி..நண்பர் செய்த சதியால் நேர்ந்த அவலம்!
ஆணாக உறங்கச் சென்ற தான் பெண்ணாக விழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
பெண்ணாக எழுந்த..
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த முஜாஹித்(20) என்பவர், தனக்கு அனுமதியின்றி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக மருத்துவர்கள் மீது புகார் தெரிவித்துள்ளார்.
மயக்கமான நிலையில் தன்னை ஓம்பிரகாஷ் என்ற நபரால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்கே தன்னை மேலும் மயக்கத்தில் ஆழ்த்தி, அறுவை சிகிச்சை செய்து விட்டார்கள் எனவும் முஜாஹித் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஓம்பிரகாஷ் என்பவர் தன்னை துன்புறுத்தி வருவதாகவும் முஜாஹித் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு மன்சூர்பூரில் உள்ள பெக்ராஜ்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை செய்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக முஜாஹித் கூறுகையில்,இந்த பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக, மருத்துவர்களை ஓம்பிரகாஷ் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளார்.
நண்பர் செய்த சதி
இரவு ஓம்பிரகாஷ் என்னை இங்கே அழைத்து வந்தார். மறுநாள் அதிகாலையில் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுயநினைவு திரும்பிய போது, ஆணாக இருந்த என்னை பெண்ணாக மாற்றிவிட்டதாக தெரிவித்தார்கள்” என்று கூறினார்.
மேலும் ’நான் கண்விழித்த போது ஓம்பிரகாஷ் என்னிடம் வந்து, இப்போது நீயொரு பெண்ணாக மாறிவிட்டாய் என்றும், உன்னை திருமணம் செய்து கொள்ள லக்னோவுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன்’ என்றான். கூடவே, அவனுக்கு உடன்பட மறுத்தால் என் தந்தையைக் கொன்று விடுவதாகவும் மிரட்டினான்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், பெக்ராஜ்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் முஜாஹிதின் இந்தக் கூற்றை மறுக்கின்றனர். முஜாஹித் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றினூடே, முஜாஹித்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஜூன் 16 அன்று ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.