மூடநம்பிக்கையில் நேர்ந்த விபரீதம்; நாக்கை அறுத்து கடவுளுக்கு பூஜை - நடந்தது என்ன?

India Chhattisgarh Crime
By Swetha May 10, 2024 04:40 AM GMT
Report

நபர் ஒருவர் தனது நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபரீதம் 

சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டம் தனாட் கிராமத்தில் வசிப்பவர் ராஜேஷ்வர் நிஷாத் (33). இவர் காலையில் தன் வீட்டுக்கு அருகில் உள்ள குளத்துக்கு சென்றுள்ளார். பின்னர், சில மந்திரங்களை ஓதிக் கொண்டு நாக்கை கத்தியால் வெட்டி பக்கத்தில் உள்ள ஒரு கல்லில் வைத்தார்.

மூடநம்பிக்கையில் நேர்ந்த விபரீதம்; நாக்கை அறுத்து கடவுளுக்கு பூஜை - நடந்தது என்ன? | Man Chops Off Tongue As Sacrificial Offering

இதைத்தொடர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணையை நடத்தினர்.

நாக்கில் கொத்தாக வளரும் முடி; சிகரெட்டால் இப்படி ஒரு பிரச்சனையா? ஷாக் சம்பவம்!

நாக்கில் கொத்தாக வளரும் முடி; சிகரெட்டால் இப்படி ஒரு பிரச்சனையா? ஷாக் சம்பவம்!

மூடநம்பிக்கை

கிராமவாசிகள் தகவல் படி, ராஜேஷ்வர் நிஷாத்தின் மனைவி வாய் பேச முடியாதவர். எனவே அவருக்கு பேச்சு வரவேண்டும் என வேண்டி தனது நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தி இருக்கிறார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூடநம்பிக்கையில் நேர்ந்த விபரீதம்; நாக்கை அறுத்து கடவுளுக்கு பூஜை - நடந்தது என்ன? | Man Chops Off Tongue As Sacrificial Offering

இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், "இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. நாக்கை வெட்டிக்கொள்ள, ராஜேஷ்வர் நிஷாத் பயன்படுத்திய கத்தியை மீட்டுள்ளோம். இந்த சம்பவம் மூடநம்பிக்கையின் காரணமாக நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” இவ்வாறு கூறினார்.