விவாகரத்தை 40 லிட்டர் பாலை வாங்கி.. குளித்து கொண்டாடிய இளைஞர் - என்னனு பாருங்க
மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற கணவர் ஒருவர், பாலில் குளித்துள்ளார்.
விவாகரத்து
அசாமின் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணிக் அலி. இவர் தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்த உடனே பாலில் குளித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது வீட்டின் வெளியே 4 பிளாஸ்டிக் பாட்டில்களில் பால் நிரப்பி வைத்திருக்கிறார். ஒரு ஜக்கில் பாலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு குளிக்கிறார்.
கொண்டாடிய கணவன்
மேலும், நான் இன்று முதல் சுதந்திரமாக இருக்கிறேன். என் மனைவிக்குக் காதலன் என்று ஒருத்தன் இருக்கிறான். அவனுடன் அடிக்கடி ஓடி போய்விடுவாள். அவரை மீட்டு வருவதே எனது வேலையாக இருந்தது.
எங்கள் குடும்பத்தின் கவுரவத்திற்காக இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். நேற்றுதான் விவாகரத்து இறுதியானதாக எனது வழக்கறிஞர் எனக்குத் தெரிவித்தார்.
அதனால் இன்று என் சுதந்திரத்தைக் கொண்டாடப் பாலில் குளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.