சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்த சம்பவம்- திருமண நிகழ்ச்சியில் அரங்கேறிய கொடூரம் - பகீர்!
திருமண நிகழ்ச்சியில் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமண நிகழ்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த 21ம் தேதி பிரேம் மண்டபத்தில் திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது விருந்தினர்களுக்காக பல்வேறு வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பின்னர் விருந்து பரிமாறப்பட்டது.
இதற்கிடையே, நடந்த திருமண விழாவில் சமையல்காரர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பிச் சமைத்துள்ளார். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சப்பாத்தி
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், பிஜ்னோரைச் சேர்ந்த இர்ஃபான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து இர்ஃபான் மீது பிரிவுகள் 272, 275 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், அக்டோபர் 2024 இல், சப்பாத்தி தயாரிப்பதற்காக மாவைப் பிசைவதற்குச் சிறுநீரைப் பயன்படுத்தியதாக 32 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.