ஹோட்டலில் காதலனுடன் மனைவி - நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய கணவன்!
காதலனுடன் இருந்த மனைவியை, கணவன் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனைவியின் செயல்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் தமன். இவரது மனைவி அங்குள்ள ஒரு ஹோட்டலில் காதலனுடன் சிக்கினார். அவர் மனைவியுடன் இருந்தவர் உள்ளூர் தலைவர் எனக் கூறப்படுகிறது. இருவரையும், தமனும் அவரது நண்பர்களும் நடுரோட்டில் அடித்து உதைத்தனர்.\

மேலும், அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதுகுறித்து தமன் தெரிவிக்கையில், தனது மனைவி நீண்ட நாட்களாக இதை செய்து வருகிறார் ஒவ்வொரு நாளும் அவர் இப்படி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவர் அப்படி ஏதாவது செய்வார் என்று எனக்குத் தெரியும்.
தர்ம அடி
அதனால்தான் என் நண்பர்களை அவரை கண்காணிக்கச் சொன்னேன். நான் ஓட்டலை அடைந்து 2-3 மணி நேரம் காத்திருந்து அவர்களைப் பிடித்தேன். என் மனைவி என்னைக் கொன்றுவிடுவதாகவும், பல சந்தர்ப்பங்களில் என் மீது பழியைப் போடுகிறார் எனக் கூறினார்.
ஆனால் அவரது மனைவி அதனை மறுத்துள்ளார். நான் எனது சொந்த விருப்பத்தின் பேரில் ஓட்டலுக்கு வரவில்லை.எனது கணவர் தான் அழைத்து வந்தார். அவர் என்னை உள்ளூர் தலைவரிடம் அனுப்பி இன்று வழக்கை முடிக்கச் சொன்னார். நான் அங்கு சென்றதும், அவர் தனது நண்பர்களுடன் வந்து எங்களை அடிக்கத் தொடங்கினார் எனத் தெரிவித்தார்.
மேலும், உள்ளூர் தலைவர், வழக்கை விவாதிக்க தான் அங்கு அழைக்கப்பட்டதாகவும், அந்த பெண்ணுடன் அறையில் நேரத்தை செலவிடவில்லை என்றும் கூறினார்.