நடுரோட்டில் செருப்பால் சரமாரி அடி: போதையில் பெண்ணை தாக்கிய கும்பல்!

Viral Video Crime Madhya Pradesh
By Sumathi Nov 08, 2022 08:13 AM GMT
Report

மதுபோதையில் இருந்த இளம்பெண்கள், பெண் ஒருவரை சரமாரியாக தாக்கிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.

மதுபோதை

மத்தியபிரதேசம், இந்தூரில் தனு மார்க்கெட் உள்ளது. அங்குள்ள ஒரு நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அதிகாலை 1 மணியளவில் என்ஐஜி சந்திப்பு பகுதியில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார்.

நடுரோட்டில் செருப்பால் சரமாரி அடி: போதையில் பெண்ணை தாக்கிய கும்பல்! | Four Drunk Women Kick Another Woman S In Indore

அப்போது, அங்கு மதுபோதையில் வந்த 4 இளம்பெண்கள் அந்த பெண்ணை திடீரென சரமாரியாக தாக்கினர். செருப்பு, பெல்ட்டை கொண்டு நடுரோட்டில் தாக்கினர். தொடர்ந்து அந்தப் பெண்ணின் செல்போனை உடைத்து, அவர் முகம், கை, கால்களில் உதைத்து கொடூரமாக தாக்கிதல் நடத்தினர்.

வைரல் வீடியோ

ரோட்டில் தரதரவென இழுத்து மோசமாக நடந்துக் கொண்டனர். இதனை அங்கு அருகில் இருந்த யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். மேலும், சிலர் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர்.

அதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், தாக்குதல் நடத்திய 4 பெண்கள் மீதும் புகாரளித்தார். அதன் அடிப்படையில், மேஹா மல்வியா, டினா சோனி, பூனம் அஹிர்வார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும். அதில் ஒரு பெண் போலீஸார் அழைத்துச் சென்றபோது பத்திரிக்கையாளரை தாக்கியுள்ளார்.