பிரசவ வலி...கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் அழைத்து சென்ற அதிர்ச்சி! ஏன்?
கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி மனைவி
மத்திய பிரதேசம், தாமோ மாவட்ட ரானேஹ் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் அஹிர்வார். இவர் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதயடுத்து 108 அரசு ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்திருக்கிறார்.

சுமார் இரண்டு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகிலிருந்த சுகாதார மையத்திற்கு தனது மனைவியை அழைத்துச் சென்றார். அங்கு செவிலியர்கள், மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் மனம் உடைந்து போனார்.
2 மணி நேரமாக..
இதையடுத்து ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தனது மனவியை அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சரியான சிகிச்சை அளிக்காத காரணத்தினால் அந்த பெண் டாமோ மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது மருத்துவர்கள் அவரை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக அதிகாரி ஒருவர், "கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏன் வழங்கப்படவில்லை என்பது குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,
விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து , இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.