வெறும் 50 டாலருக்கு வாங்கிய நாற்காலியை 82 லட்சத்திற்கு விற்ற பிரபலம் - அடிச்சது லக்கு!
அமெரிக்காவில் ஒருவர் வெறும் 50 டாலருக்கு வாங்கிய நாற்காலியை 82 லட்சத்திற்கு விற்றது வைரலாகி வருகிறது.
பிரபலம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் மில்லர். இவர் டிக்டாக் மூலம் பிரபலமானவர், இவர் பழம்பொருட்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் பழம்பொருட்கள் தொடர்பாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து அந்த பொருட்கள் பற்றிய அருமைகள் புரிந்ததுள்ளது.

இவர் பேஸ்புக்கில் மார்க்கெட்டில் ஒரு பழமையான நாற்காலியை கண்டுள்ளார். அதில் ஏதோ ஒரு சிறப்பு இருப்பதாக அறிந்த அவர் வெறும் 50 டாலருக்கு (இந்திய மதிப்பில் அது 4000ரூ) அதனை வாங்கினார்.
வைரல் வீடியோ
இதனை தொடர்ந்து, இவர் அந்த நாற்காலியை சீரமைக்க ரூ.2.5 லட்சம் வரை செலவு செய்துள்ளார். பிறகு பழைய பொருட்களை விற்பனை செய்யும் ஏல நிறுவனத்திற்கு நாற்காலியை கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அங்கு பழமையான நாற்காலியை வாங்க கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் அந்த நாற்காலி 1 லட்சம் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.82 லட்சம்) ஏலம் போனது. இதனால் மகிழ்ச்சி அடைந்த இவர் இதுகுறித்து தனது டிக்டாக் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.