ரூ.50க்காக கடைக்காரரின் விரலைக் கடித்த கஸ்டமர் - அலறிய தந்தை, மகன்
கடைக்காரரின் விரலை ஒருவர் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விரலை கடித்த நபர்
உத்தரப்பிரதேசம், பண்டா மாவட்டத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் நபர் ஒருவர் ஆடை எடுக்கச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் மீண்டும் அந்த நபர் கடைக்கு வந்து ஆடையின் அளவு சிறியதாக இருப்பதாக கூறி பெரிய அளவு ஆடையை கேட்டுள்ளார்.
உடனே, கடையின் உரிமையாளர் பெரிய அளவு ஆடைக்கு கூடுதலாக 50 ரூபாய் அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறி ஆடை வாங்க வந்த நபர் கடை உரிமையாளரின் விரலை கடித்துள்ளார்.
தேடுதல் வேட்டை
மேலும், அவரது மகனின் விரலையும் கடித்துள்ளார். அதனையடுத்து ஆடையை கடைக்கு வெளியே சாலையில் எறிந்து விட்டு அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். உடனே கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தப்பி ஓடிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.