வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவியின் ஆள்காட்டி விரலை கடித்து தின்ற கணவன் - வெறிச்செயல்!
வாக்கு வாதத்தில் ஈடுபட்ட மனைவியின் விரலை கணவன் கடித்து தின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரலை கடித்து தின்ற கணவன்
பெங்களூரூவைச் சேர்ந்த தம்பதியினர் விஜய் குமார் - புஷ்பா.இருவருக்கும் திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்த தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி ஏற்பட்ட தகராறு மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக மனைவி புஷ்பா தனது மகனுடன் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 28ம் தேதி மாலை 4 மணிக்கு விஜய் குமார் தனது மனைவி தங்கியிருக்கும் வாடகை வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார் விஜய் குமார் .வாக்குவாதத்தில் புஷ்பாவின் இடது கை ஆள்காட்டி விரலைக் கடித்து விழுங்க முயன்றுள்ளார் விஜய் குமார்.
போலீசார் கைது
இந்நிலையில் இதுகுறித்து கோணனகுண்டே காவல் நிலையத்தில் மனைவி புஷ்பா புகார்அளித்தார் . இதனைத்தொடர்ந்து கணவன் விஜய் குமார் மீது குடும்ப வன்முறைக்கான எப்ஐஆர் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.