தம்பி மனைவியின் உதட்டை கடித்து துப்பிய அண்ணன்.. துடித்துடித்த பெண் - பகீர் சம்பவம்!
தம்பி மனைவியின் உதட்டை அண்ணன் கடித்து கொதறிய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
தம்பி மனைவி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் லட்சுமணன் மற்றும் தங்கம் தம்பதியினர். இந்த சூழலில் லட்சுமணன் மற்றும் அவரது உடன் பிறந்த சகோதரர் ராமர் இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர்.
நீண்ட நாட்களாகவே இந்த இரண்டு வீட்டிற்கும் அருகே செல்லும் பாதை தொடர்பாக பிரச்சனை இருந்துகொண்டே இருந்துள்ளது. அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு காவல் நிலையத்திற்கு செலவதையே இந்த குடும்பத்தினர் வழக்கமாக வைத்துள்ளனர்.
பகீர் சம்பவம்
இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு இந்த பாதையை ராமர் அடைத்து விட்டாதாக கூறப்படுகிறது. அப்போது அவரது கணவரின் அண்ணன் அரிவாளை எடுத்து விரட்டி உனக்கு இங்கு பாதை இருக்கிறதா? என கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதனால் இரண்டு குடும்பத்திற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறி உள்ளது. இதில் கடும் கோபமடைந்த ராமர் தனது தம்பி மனைவியான தங்கத்தின் உதட்டையும் வாயையும் சேர்த்து கடித்து கொதறியுள்ளார். அதிகமாக இரத்தம் கொட்டி வலியில் பரி தவித்த பெண்னை அங்கிருந்து
அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸை வரவழைத்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்து மூன்று நாட்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.