பர்த் டே பார்ட்டி.. வீட்டில் பொய் சொல்லி சென்ற இளம்பெண் - ஆண் நண்பரால் நேர்ந்த கொடூரம்!
பர்த் டே பார்ட்டி என பொய் சொல்லி சென்ற பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இளம்பெண்
செங்கல்ப்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பல்லாவரத்தில் வசிக்கும் ஹரிஷ் என்பவருடன் பேசி வந்துள்ளார். நாளடைவில் நெருங்கி பழக தொடங்கிய அவர்கள் இருவரும் சந்திக்கலாம் என ஹரிஷ் வெளியில் அழைத்துள்ளார்.
அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் அந்த பெண் கடந்த வாரம் வெளியில் செல்ல முடிவு செய்தார். அதற்கு அம்மாவிடம் தோழியின் பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பிறகு அந்த பெண்னை ஹரிஷ் அழைத்து கொண்டு பல்லாவரத்தில் உள்ள தனது அறைக்கு வந்துள்ளார்.
இருவருமே இரண்டு நாட்கள் ஒன்றாக இருந்துள்ளனர். பின்னர் ஹரிஷ் தனது நண்பர்கள் மூவரை அழைத்து வரவைத்து அந்த இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வலியால் துடித்துடித்த அந்த பெண் இரவு, சிட்லப்பாக்கத்தில் உள்ள தனது சகோதரருக்கு,
கொடூரம்
மாறி மாறி செல்போனில் குறுஞ்செய்தி மற்றும் இருப்பிடம் தொடர்பான லொக்கேஷனை அனுப்பியிருக்கிறார். அதை வைத்து, அவரது சகோதரர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பிறகு அந்த பெண்ணின் குடும்பத்தினரை அழைத்து பத்திரமாக ஒப்படைத்தனர். இதனிடையே ஹரிஷ் எந்த பகுதியை சேர்ந்தவர், எந்த இடத்தில் தங்கினர், ஹரிஷின் நண்பர்கள் யார் உள்ளிட்ட எந்த விவரமும் போலீசுக்கு தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், விசாரணை நடத்தி முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் கூறினர். விரைவில் அந்த 3 பேரை கண்டுபிடித்து கைது செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.