டோல்கேட் பெண் ஊழியரை சரமாரியாக தாக்கிய நபர் - செருப்பால் திருப்பி அடித்த பெண்!

Viral Video Maharashtra
By Sumathi Aug 22, 2022 08:00 AM GMT
Report

 டோல்கேட்டில் தன்னை தாக்கிய நபரை, பெண் ஊழியர் செருப்பைக் கழற்றி அடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

டோல்கேட் தகராறு

மகாராஷ்டிராவில் பலமுறை டோல்கேட் நீக்கக்கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் நெடுஞ்சாலைகளில் இருக்கும் அதிக டோல்கேட் மற்றும் கட்டணங்கள்.

டோல்கேட் பெண் ஊழியரை சரமாரியாக தாக்கிய நபர் - செருப்பால் திருப்பி அடித்த பெண்! | Man Beats Women In Tollgate Video

இவற்றை குறைக்கக்கோரியும், நீக்கக்கோரியும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் டோல்கேட்டில் பெண் ஊழியரை, நபர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரமாரி தாக்குதல்

எதற்காக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. அந்த வீடியோவில் டோல்கேட் பெண் ஊழியரிடம் வேகமாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தாக்குகிறார்.

எதிர்பார்க்காத பெண், தானும் உடனடியாக அவரை திருப்பித் தாக்குகிறார். காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி தன்னை அடித்த நபரை தாக்குகிறார். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

பலரும் பெண்ணை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இன்னும் சிலர், அங்கு நடந்த சம்பவத்தை முறையாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.