டோல்கேட் ஊழியர்களை தாக்கிய பாஜக தலைவர் - திருச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம்
திருச்சி அருகே சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய பாஜக மாவட்ட தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் தினம் பாஜக கொடி கட்டிய வாகனத்தில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று வந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள பொன்னம்பலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியை கடக்க முயன்றது.
ஆனால் பாஸ்டேக்கில் பணம் இல்லை என்பதால் மூன்றாவது லைனில் இருந்து முதல் லைனுக்கு காரை திருப்பி வரும்படி தூரத்திலிருந்து ஊழியர் கையால் சைகையில் தெரிவித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த காரில் இருந்த அந்த பாஜக பிரமுகர் காரில் இருந்து இறங்கி அப்போது பணியில் இருந்த ஊழியர்களை தகாத வார்த்தைளால் திட்டினார். மேலும் தாக்கவும் முயற்சித்திருக்கிறார். இதனால் அந்த இடத்தில் கூட்டம் கூடியது.
மேலும் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் அங்கிருந்த நபர் பாஜகவின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரை கூப்பிட்டு தன்னை அடித்து விட்டதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
மேலும். அருகில் இருக்கக்கூடிய கட்சி நிர்வாகிகளையும் தொலைபேசி மூலம் வரச் சொல்ல அடுத்த சில நிமிடங்களில் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் ஒரு காரிலும், மணப்பாறையில் இருந்து ஒரு காரில் சில நிர்வாகிகளும் வந்துள்ளனர். அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த ராஜசேகர் சுங்கச்சாவடியின் ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களை பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகர் தாக்கிய காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களி வெளியாகி வைரலாகியுள்ளது.