ஆசையாக மனைவியை பார்க்க சென்ற கணவன் - மாமனார் வெறிச்செயல்!
தனது தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை காண சென்ற கணவரை பெண் வீட்டார் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
ராஜஸ்தான் மாநிலம், சிகார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சைனி, 36 வயதான இவருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அம்ரீன் என்ற பெண்ணுக்கும் 2021-ல் திருமணம் நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமான பணிக்காக சைனி அந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.
இருவரும் திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டாரிடம் கேட்டபொழுது பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் திருமணம் செய்து கொண்டு ஜெய்பூரில் வாழ்ந்து வந்தனர்.
தொடர்ந்து பெண் வீட்டார் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி இருவரிடமும் விசாரணை நடத்தினர் இதில் இருவரும் விருப்பத்தோடு தான் திருமணம் முடித்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் ராஜஸ்தானில் வாழ்ந்து வந்தனர்.
பெண் வீட்டார் செய்த காரியம்
இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன்னர் அம்ரீன் தனது பெற்றோரை பார்க்க தனது சொந்த ஊருக்கு சென்றார்.
அதன்பின்னர், அவர் வீடு திரும்பில்லை. இதனால் கவலை அடைந்த சைனி அம்ரீனை பார்க்க அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது தனது மகளை அனுப்ப முடியாது எனக் கூறி சைனியை தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர் மே 13-ம் தேதி மறுமுறை மனைவியை காண சென்றுள்ளார், அப்போது அம்ரீனின் தந்தை, அவரது சகோதரர் ஆகியோர் சேர்ந்து சைனியை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த சைனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அடுத்த நாளே அவர் உயிர் பிரிந்தது.
இதனால் சைனியின் சகோதரர் கந்த்வா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி அந்த பெண் வீட்டார் சகோதரர் சல்மான், தாய் முன்னிபாய், தந்தை மும்தாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.