பந்து வீச்சில் மிரட்டிய பெங்களூரு - 59 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்த ராஜஸ்தான்

Rajasthan Royals Royal Challengers Bangalore IPL 2023
By Thahir May 14, 2023 01:01 PM GMT
Report

112 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆர்சிபி.

நிதானமாக ஆடிய பெங்களூரு

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய லீக் போட்டி சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் டு பிளசிஸ்.

ஆர்சிபி அணிக்கு ஓப்பனிங் இறங்கிய விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் ஜோடி பவர்-பிளே ஓவர்களில் விக்கெட் இழக்காமல் நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி 18 ரன்கள் அடித்திருந்தபோது, கேஎம் ஆசிப் பந்தில் தவறான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார்.

அடுத்து உள்ளே வந்த கிளென் மேக்ஸ்வெல் கடந்த போட்டியில் இருந்த ஃபார்மை அப்படியே தொடர்ந்தார். அதிரடியாக விளையாடி வந்த டு பிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. அரைசதம் அடித்திருந்த டு பிளசிஸ் 44 பந்துகளில் 55 ரன்கள் அடித்து இருந்தபோது, கேஎம் ஆசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

Rajasthan lost against RCB

அதன்பிறகு ஆட்டத்தை அதிரடியாக எடுத்துச் சென்ற மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். உள்ளே வந்த மஹிப்பால் லோமரர் 1 ரன், தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். நன்றாக ஆடிவந்த மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 54 ரன்கள் அடித்து, சந்திப் சர்மாவின் வந்து வீட்டில் கிளீன் போல்ட் ஆனார்.

ராஜஸ்தான் அணி தோல்வி 

இந்த நிலையில் ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

Rajasthan lost against RCB

இந்த நிலையில் 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் 59 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 112 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது.