தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - 3 பேர் உடல் கருகி பலி!

Coimbatore Death
By Sumathi Jul 16, 2024 05:30 AM GMT
Report

இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

தீக்குளித்து தற்கொலை

தேனியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் 7 பேர் கோவை மாவட்டம், சூலூர் முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் அறை எடுத்து வசித்து வந்துள்ளனர்.

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - 3 பேர் உடல் கருகி பலி! | Man Attempt Commit Suicide Coimbatore Three Died

இதில் ஓட்டுநர் அழகுராஜா என்பவர், சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் கைதாகி வெளிவந்த அவர், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு நண்பர்கள் ஏழு பேரும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது, ஓட்டுநர் அழகுராஜா தன் உடலுக்கு பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதில், அறையில் இருந்தவர்கள் மீதும் தீப்பற்றி உள்ளது. இதில் ஏழு பேர் மீது தீ பற்றி எரிந்துள்ளது. அழகுராஜா உட்பட அவரது நண்பர்கள் இருவர் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த மகன் நா.த.க மீது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!

காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த மகன் நா.த.க மீது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!

மூவர் பலி

மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், அறையில் மற்ற டிரைவர்கள் மது அருந்தியதாகவும், அந்த நேரத்தில் சமையல் எரிவாயு அடுப்பில் சமைத்து கொண்டு இருந்துள்ளனர்.

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - 3 பேர் உடல் கருகி பலி! | Man Attempt Commit Suicide Coimbatore Three Died

உயிரிழந்தவர்களில் ஒருவர் எரிவாயு அடுப்பு அருகே இருந்த 10 லிட்டர் கேனில் இருந்த பெட்ரோலை ஒரு லிட்டர் கேனுக்கு ஊற்ற முயன்றதால், அறை முழுவதும் தீ பரவியதாகவும் அதனால் விபத்து ஏற்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.