பூனையை பச்சையாக சாப்பிட்ட இளைஞர்; 5 நாட்களாக வாட்டிய பசி - என்ன நடந்தது?

Kerala Assam
By Sumathi Feb 05, 2024 06:54 AM GMT
Report

இளைஞர் ஒருவர் இறந்த பூனையை பச்சையாக சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்டிய பசி

கேரளா, குட்டிப்புரம் எனும் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில், 27 வயது இளைஞர் ஒருவர் இறந்த பூனையை பச்சையாக சாப்பிட்டதை மக்கள் பார்த்துள்ளனர்.

பூனையை பச்சையாக சாப்பிட்ட இளைஞர்; 5 நாட்களாக வாட்டிய பசி - என்ன நடந்தது? | Man Ate A Cat In Kerala Due To Hunger

தொடர்ந்து, போலீஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது, வர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், 5 நாட்களாக ஒன்றுமே சாப்பிடாததால் இப்படி நடந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளால் மனவேதனை - ரூ.23 கோடி சொத்தை நாய், பூனைக்கு எழுதி வைத்த மூதாட்டி!

பிள்ளைகளால் மனவேதனை - ரூ.23 கோடி சொத்தை நாய், பூனைக்கு எழுதி வைத்த மூதாட்டி!

அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் குறித்து பேசிய போலீஸ் அதிகாரி, அவரிடம் விசாரித்தபோது, ​​அவர் கடந்த ஐந்து நாட்களாக உணவு எதுவும் சாப்பிடவில்லை என்று கூறினார். பின்னர் நாங்கள் வாங்கித்தந்த உணவை மறுக்காமல் வாங்கிகொண்டு சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவர் யாரிடமும் சொல்லாமல் தலைமறவாக சென்றுவிட்டார்.

பூனையை பச்சையாக சாப்பிட்ட இளைஞர்; 5 நாட்களாக வாட்டிய பசி - என்ன நடந்தது? | Man Ate A Cat In Kerala Due To Hunger

அதன்பின், இளைஞன் உள்ளூர் ரயில் நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்த நிலையில் அவரை தேடிச்சென்றோம். சென்னையில் பணிபுரியும் அண்ணனின் அலைபேசி எண்ணை எங்களிடம் கொடுத்தார். அவரைத் தொடர்பு கொண்டு இவர் கூறும் தகவல் சரியானது தானா என்பதை உறுதி செய்தோம்.

பின்னர் அவரை திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தோம். முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அந்த நபருக்கு உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிய அவர், உறவினர்கள் இங்கு வந்ததும் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.