பிரேக் அப் செய்த காதலி- செலவழித்த பணத்தை GST உடன் திருப்பிதர கோரிய காதலன்!

Delhi Viral Photos Social Media
By Swetha Jun 01, 2024 01:13 PM GMT
Report

காதலியுடன் பிரேக் அப் ஆனதால் தான் செலவழித்த பணத்தை காதலன் பட்டியலிட்ட பதிவு வைரலாகியுள்ளது.

பிரேக் அப் 

காதல் ஜோடிகள் வெளியில் சென்று நேரத்தையம் பணத்தையும் செலவிடுவது ஒன்றும் புதிதல்ல, அவ்வப்போது தங்களது காதலை சுவாரஸ்யமாக வைத்துக்கொள்ள காதலன் காதலிக்கு பரிசு, உணவு,பூக்கள் போன்றவற்றை வாங்கு கொடுப்பது வழக்கமான ஒன்று. ஒருவேளை இருவருக்கும் சில காரணங்களால்,

பிரேக் அப் செய்த காதலி- செலவழித்த பணத்தை GST உடன் திருப்பிதர கோரிய காதலன்! | Man Asks His Money Back As Girl Breakups With Him

பிரேக் அப் ஆகிவிட்டால் தான் செலவழித்த பணம் எல்லாம் வீணாகிவிட்டதே என்று பலர் புலம்புவது தெரிந்த விஷயம் தான். ஆனால், டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரிந்து சென்ற காதலியிடம் காதல் செலவை பட்டியல் போட்டு அனுப்பிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வேறு பெண்ணுடன் நெருக்கமாக பேசிய காதலன் - ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்!

வேறு பெண்ணுடன் நெருக்கமாக பேசிய காதலன் - ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்!

காதலன்  பணம்

பட்டய கணக்காளரான அந்த வாலிபரும், இளம்பெண்ணும் காதலித்து வந்த போது ஒன்றாக பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். 7 மாதங்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென இருவரும் பிரிந்துள்ளனர். இந்த சூழலில், காதலிக்கு தான் செலவு செய்த பட்டியலை அனுப்பி பணத்தை திருப்பி தருமாறு அவர் கூறி உள்ளார்.

பிரேக் அப் செய்த காதலி- செலவழித்த பணத்தை GST உடன் திருப்பிதர கோரிய காதலன்! | Man Asks His Money Back As Girl Breakups With Him

அதில், காதலியை வெளியே அழைத்து சென்ற போது வாகன செலவு ரூ.450, திரைப்படங்களுக்கு சென்றது, காபி குடித்தது, ஆட்டோவில் சென்றது, பூக்கள் வாங்கி கொடுத்தது, உணவுக்கு செலவு செய்தது என அனைத்தையும் தனித்தனியாக பட்டியல் போட்ட அவர் மொத்தமாக 7 மாதங்களில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் வரை செலவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும். இந்த மொத்த தொகையில், ரூ.51 ஆயிரத்தை தனது காதலி பகிர்ந்து கொண்டதால் மீதமுள்ள பணத்திற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து அனுப்ப வேண்டும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த செலவு பட்டியல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்து நெட்டிசன்கள் பலரும் இதற்கு கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.