எனக்கு ஒரு காதலி வேணும்; கதறிய நபர் - போலீஸார் சொன்ன பதிலை பாருங்க..
ஒரு காதலியை தேடி பிடித்து கொடுங்கள் என நபர் ஒருவர் போலீஸில் புகாரளித்துள்ளார்.
காதலி வேண்டும்..
உலக புகையிலை இல்லா தினத்தையொட்டி, புகையிலையால் ஏற்படும் தீங்கை விளக்கும் வகையில் டெல்லி போலீசார் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டனர்.
அதில், புகையிலை உங்களை கொல்வது மட்டுமின்றி, உங்களுடைய புன்னகையையும் கொல்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், சிவம் பரத்வாஜ் என்ற பயனாளர் ஒருவர் இதற்கு சம்பந்தமில்லாத வகையில் பதிவொன்றை வெளியிட்டார்.
போலீஸார் கலகல..
அந்தப் பதிவில் தனக்கு ஒரு காதலியை தேடி பிடித்து தர வேண்டும். சிங்கிள் என பதிவிடுவதற்கு பதிலாக தவறுதலாக சிக்னல் என்றுக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டெல்லி போலீஸார், நாங்கள் காணாமல் போன காதலியை கண்டுபிடித்து வேண்டுமென்றால் தர முடியும்.
Sir, we can help you find her (only if she ever goes missing).
— Delhi Police (@DelhiPolice) May 31, 2024
Tip: If you are a 'signal', we hope you stay green, not red. https://t.co/3wHDwGxlEl
காதலியை தேடி பிடித்து எல்லாம் தர முடியாது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், நீங்கள் சிக்னல் என்றால், நீங்கள் பச்சையாக (கிரீன்) இருங்கள். சிவப்பாக (ரெட்) வேண்டாம். ரு வேளை அவரை தவற விட்டால்,
காதல் வாழ்வில் பரஸ்பரம் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என அடையாளப்படுத்துவதற்காக பச்சை கொடியையும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது காமெடி கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.