ஆசை நாயகிக்கு 550சவரன் பரிசாக அளித்த தொழிலதிபர் - குடித்தே அழித்த மாடல் அழகி!

Chennai Crime
By Sumathi Aug 10, 2022 07:37 AM GMT
Report

சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடிய தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழிலதிபர்

சென்னை பூவிருந்தவல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (40), தொழிலதிபர். இவரது தம்பி ராஜேஷ் (37). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது தாய் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

ஆசை நாயகிக்கு 550சவரன் பரிசாக அளித்த தொழிலதிபர் - குடித்தே அழித்த மாடல் அழகி! | Man Arrested For Stealing 550 Sovereign Gold

இவர்கள் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

550சவரன் திருட்டு

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்து அவரது பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை பார்த்த போது அது மாயமாகியிருந்தது. மேலும், ராஜேஸின் மனைவி நகை, தமிழ்ச்செல்வியின் நகை 200 சவரன், 5 தங்க கட்டிகளும் காணாமல் போயிருந்தது.

ஆசை நாயகிக்கு 550சவரன் பரிசாக அளித்த தொழிலதிபர் - குடித்தே அழித்த மாடல் அழகி! | Man Arrested For Stealing 550 Sovereign Gold

இது குறித்து அவர்கள் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசாரின் விசாரணையில் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது ஆசை நாயகிக்கு கொடுத்திருப்பது தெரியவந்தது.

தோழிக்கு பரிசு 

இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு, சேகருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வதோடு வெளியூர் வரை சென்று சுற்றியுள்ளனர். மேலும் வீட்டிலிருந்த 550 சவரன் நகயையும் ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 30 லட்சம் வரை செலவு செய்து கார் ஒன்றும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

தோழியுடன் கைது

சுவாதிக்கு ஏற்கனவே , திருமணம் ஆகியதை மறைத்து சேகரை காதலித்து வருவதை போல் நடித்து வந்துள்ளார். சேகரிடம் பணம் மட்டும் நகைகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பெற்று வந்துள்ளார்.

மேலும், அவரிடம் இருந்து வாங்கிய நகைகளை விற்று ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவாதி இடம் சேகர் 200 சவரன் நகைகளை வீட்டிற்கு தெரியாமல் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த சேகரின் தாய் ஸ்வாதியிடம் சண்டையிட்டு அந்த நகைகளை மீட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக சேகர் மற்றும் ஸ்வாதியை போலீசார் கைது செய்து ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் நகைகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.