லிப்ஸ்டிக், பொட்டு: தேர்வில் சிறுமிக்கு பதிலாக இளைஞர் - சிக்கியது இப்படித்தான்.!

Crime Punjab
By Sumathi Jan 15, 2024 03:05 PM GMT
Report

தேர்வில் பெண்போல வேடமணிந்து சிறுமிக்குப் பதிலாகத் தேர்வெழுதிய இளைஞர் சிக்கியுள்ளார்.

ஆள்மாறாட்டம்

பஞ்சாப், ஜனவரி 7-ம் தேதி கோட்காபுராவிலுள்ள DAV பப்ளிக் பள்ளியில் பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கான தேர்வு நடத்தியது.

அங்ரேஸ் சிங்

இதில், ஃபசில்காவைச் சேர்ந்த அங்ரேஸ் சிங் என்ற இளைஞர் போலி ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையுடன், பெண்போல வேடமணிந்து பொட்டு, வளையல்கள், லிப்ஸ்டிக் வைத்துக்கொண்டு சிறுமிக்குப் பதிலாக தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

லேடி கெட்டப்பில உன்ன விட அழகா இருக்கேன்ல - பெண் வேடமணிந்து இலவச பேருந்தில் பயணம் செய்த யூடியூப்பர்

லேடி கெட்டப்பில உன்ன விட அழகா இருக்கேன்ல - பெண் வேடமணிந்து இலவச பேருந்தில் பயணம் செய்த யூடியூப்பர்

சிக்கிய இளைஞர் 

இதனை பயோமெட்ரிக் கருவிகள் உதவியுடன் பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுபிடித்தது. உடனே, போலீஸாருக்கு தகவலளித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு அங்ரேஸ் சிங் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

punjab

மேலும், ஃபராய்ட்கோட் எஸ்.பி ஜஸ்மீத் சிங், இந்த விவகாரத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம். விசாரணையை முடித்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.