ஆபாச படம் பார்த்தியா.. போலீஸ் போன்று மிரட்டி பண வசூல் - கடைசியில் ட்விஸ்ட்!

Tamil nadu Crime
By Sumathi Nov 04, 2022 07:37 AM GMT
Report

ஆபாச படம் பார்த்ததாக கூறி போலீஸ் போல் நடித்து பேசி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண மோசடி

திருச்சையைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் நான் காவல்துறையிலிருந்து பேசுகிறேன். நீங்கள் உங்களது செல்போனில் ஆபாச படம் பார்த்து உள்ளீர்கள். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆபாச படம் பார்த்தியா.. போலீஸ் போன்று மிரட்டி பண வசூல் - கடைசியில் ட்விஸ்ட்! | Man Acted Like Police And Get Money In Trichy

அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதற்காக உங்களை கைது செய்ய உள்ளோம் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த நபர், நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என கேட்டுள்ளார். அதற்கு அப்படியானால் தனது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தும்படி கூறியுள்ளார் மர்ம நபர்.

தட்டி தூக்கிய போலீஸ்

இவரும் அதனால், முதலில் ரூ.5000, மறுபடி ரூ.15,600 என மொத்தம் ரூ.20,600 செலுத்தியுள்ளார். மேலும், அந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், பாதிக்கப்பட்டவர் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

அதனையடுத்து பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண்னை வைத்து விசாரணை செய்தனர். அதில் கோவை, வடவள்ளியைச் சேர்ந்த அசேக்(23) என்பவர் தெரியவந்தது. தொடர்ந்து, அவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து அதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.