ஆண்களை ஓரின சேர்க்கைக்கு அழைக்கும் கும்பல் - மாணவர்கள் அதிரடி கைது!
மொபைல் ஆப் மூலம் ஆண்களை ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கும் கும்பல், அவர்களை நிர்வாணபடுத்தி வீடியோ எடுப்பதும், சமூகவளைதளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இரண்டு கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ள போலீசார் மேலும் ஒரு மாணவனை வலைவீசி தேடிவருகின்றனர்.
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் (34). கோவையிலுள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் சமையல்காரராக வேலை செய்துவருகிறார்.
கங்காதரன் தன்னுடைய செல்போனில் ஓரினைச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் (BLUED APP) செயலி ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 27-ம் தேதி இந்த செயலி மூலம் கங்காதரனை தொடர்பு கொண்ட வாலிபர் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.
சாய்பாபா காலணி பகுதியிலுள்ள தனியார் மருத்துவனையின் பின்புறம் உள்ள ரயில்பாதை அருகே பிரசாந்த், தனது நண்பர்களான நிசாந்த் மற்றும் மாணிக்கம் ஆகியோரையும் உடன் அழைத்து சென்றுள்ளார்.
நள்ளிரவு 2.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த கங்காதரன் பிரசாந்த் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது, அதை மறைந்திருந்த நிசாந்த் மற்றும் மாணிக்கம் இருவரும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டிய மூவரும், கங்காதரனை தாக்கியதோடு கையிலிருந்த 2500 ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துச்சென்றனர்.
மேலும் இதுகுறித்து போலீசில் தெரிவத்தால் வீடியோவை சமூகவளைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அச்சத்தில் இருந்த கங்காதரன் சம்பவம் தொடர்பாக நேற்று சாய்பாபா காலணி போலீஸில் புகார் அளித்தார்.
அதன் பேரில் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்), 397 (கொலை அல்லது கொடூரமான காயத்தை ஏற்படுத்தும் முயற்சியுடன் கொள்ளை அல்லது கொள்ளை) மற்றும் 506 (ii) ( மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு பதிவு செய்த போலீசார் மூன்று வாலிபர்களையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரசாத் மற்றும் நிசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மாணிக்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.. போலீசார் இருவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில் சிவானந்தா காலணி பகுதியைச் சேர்ந்த பிரசாத் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியிலும், நிசாந்த் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
மூன்று மாணவர்களும் இணைந்து பிரபல ஒரினசேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலி மூலம் ஆண்களை குறிவைத்து ஓரினசேர்க்கைகு அழைத்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதோடு அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரை, இதே போன்று ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து மிரட்டி பணம் பறித்து உள்ளதாகவும், கடந்த மார்ச் 9-ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த மருந்தாளுநர் என்பவரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் செல்போனை பறித்துள்ளதும் போலீசார் நடத்திய விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோவையில் மொபைல் டேட்டிங் செயலி மூலம் ஆண்களை ஓரினைசேர்க்கை அழைத்து, அவர்களை நிர்வாணபடுத்தி பணம் பறித்து வந்த மாணவர்கள் கைது செய்யபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.