நீ என் மனைவியே இல்லை... 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபர்!
5 பெண்களை திருமணம் செய்து ஒரு நபர் ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகார் மனு
கடலூர் மாவட்டத்தின் மேலே குப்பத்தைச் சேர்ந்தவர் காய்தரி(35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், எனக்கும் புதுச்சேரியின் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சீனு என்ற தெய்வநாயகத்திற்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்தின் போது அவருக்கு வரதட்சணையாக 6 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை வழங்கப்பட்டது. திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே நாங்கள் சேர்ந்து இருந்தோம்.
வரதட்சணை
அதன்பின்னர் நான் கர்ப்பம் அடைந்தேன். எனினும் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன்காரணமாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தோம். அவர் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை அடிக்கடி மிரட்டி வந்தார்.
அதனால் நான் அவரிடம் பேசாமல் இருந்தேன். இந்தச் சூழலில் எனக்கு குழந்தை பிறந்தது. அதன்பின்னர் தெய்வநாயகத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அவர் பதிலளிக்கவில்லை.
மனைவியே இல்லை
அப்போது அவர் பற்றியை உண்மை எனக்கு தெரியவந்தது .அதாவது தெய்வநாயகம் ஏற்கெனவே அனிதா,தேவி, கனகவல்லி என்ற மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது.
அத்துடன் தற்போது அவர் 5வதாக வம்பாகீர்ப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெய்வநாயகத்திடம் கேட்டப்போது அவர் நீ என்னுடைய மனைவியே இல்லை என்று கூறினார்.
திருமணம் செய்து மோசடி
அத்துடன் அவர் என்னை அடியாட்களை வைத்து கொலை செய்ய திட்டம் திட்டியுள்ளதாக தெரிகிறது. அவர் என்னிடம் திருமணத்திற்கு முன்பாக அனிதா என்ற பெண்ணுடன் அவருக்கு விவகாரத்து கிடைத்து விட்டது என்று கூறியிருந்தார்.
எனினும் அவரிடம் இருந்து இவருக்கு விவாகரத்து கிடைக்கவில்லை. ஆகவே இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தெய்வநாயகத்தின் பெயரில் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. 5 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.