பெண்ணுடன் 20 வருஷம் குடும்பம்; அண்ணன் உருவத்தில் தம்பி - மிரளவைத்த சம்பவம்!

Chennai Crime
By Sumathi Dec 04, 2024 09:30 AM GMT
Report

அண்ணனை நூதன முறையில் சிக்க வைத்த தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

நூதன மோசடி

சென்னை கோடம்பாக்கம், பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி 2009ல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பன்னீர்செல்வம் - பழனி

அதில், கணவர் பழனி அவரது சகோதரியுடன் சேர்ந்து தன்னையும், தன் மகனையும் தினமும் அடித்து துன்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் பழனி, அவரது சகோதரியை போலீஸார் கைது செய்தனர். அப்போது பழனி போலீஸில் தனது அண்ணன் பன்னீர்செல்வத்தின் அடையாள அட்டையை கொடுத்து அவர் பெயரிலேயே சிறைக்குச் சென்றுள்ளார்.

இவ்வழக்கில் பழனியின் சகோதரியை விடுவித்த நீதிமன்றம், பழனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார். அவரது தண்டனையை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம் உடனடியாக சரண் அடைய உத்தரவிட்டது. ஆனால் அதற்கிடையில் அவர் தலைமறைவானார்.

வேலை வாய்ப்பு.. பெண்களை கர்ப்பமாக்கினால் 20 லட்சம் - இளைஞர்களை குறிவைக்கும் கும்பல்!

வேலை வாய்ப்பு.. பெண்களை கர்ப்பமாக்கினால் 20 லட்சம் - இளைஞர்களை குறிவைக்கும் கும்பல்!

மிரண்ட போலீஸார்

இதனையடுத்து பழனிக்கு நீதிமன்றத்தால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் தங்கி எலக்ட்ரீஷியன் கான்ட்ராக்டராக வேலை செய்து வரும் பன்னீர்செல்வத்தை பழனி என நினைத்து போலீஸார் ஆஜர்படுத்தினர்.

பெண்ணுடன் 20 வருஷம் குடும்பம்; அண்ணன் உருவத்தில் தம்பி - மிரளவைத்த சம்பவம்! | Man 2Nd Marriage Name Of Elder Brother Chennai

அப்போது, தான் நிரபராதி என்று கூறிய பன்னீர்செல்வம், தன்னுடைய தம்பி பழனி தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து தப்பிவிட்டதாக கூறியுள்ளார். அதன்பின் கீழ்க்கட்டளையில் செல்வம் என்ற பெயரில் பதுங்கியிருந்த பழனி கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே சிம் கார்டுகள் வாங்குவது, வங்கிக் கணக்கு ஆரம்பித்து சில மாதங்களிலேயே விட்டுவிடுவது என இருந்துள்ளார். இந்த நிலையில் 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.