வேலை வாய்ப்பு.. பெண்களை கர்ப்பமாக்கினால் 20 லட்சம் - இளைஞர்களை குறிவைக்கும் கும்பல்!

Facebook India World Social Media
By Swetha Nov 13, 2024 12:00 PM GMT
Report

பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் பரிசு என ஒரு கும்பல் நூதன மோசடி செய்து வருகிறது.

20 லட்சம்

அண்மைக் காலமாக இணையத்தளம் வாயிலாக நூதன முறையில் ஏராளமான மோசடிகள் நடந்து கொண்டே இருக்கிறது. அதாவது, வேலை வாய்ப்புகள். அரசு உதவித்தொகை பெறுவது, லிங்கை தொட்டால் பரிசு போன்ற பல வழிகளிலும்,

வேலை வாய்ப்பு.. பெண்களை கர்ப்பமாக்கினால் 20 லட்சம் - இளைஞர்களை குறிவைக்கும் கும்பல்! | Cash For Making Women Pregnant Scam Lures Men

பல வகைகளிலும் மக்களுக்கு ஆசைக்காட்டி பணத்தை பறிப்பதை நோக்கமாக வைத்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகளை தவிர்க போலீசார் இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி டிஜிட்டல் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும், ஆசைகாட்டி பணம் பறிக்கும் கும்பலில் சிக்கி இன்னமும் பலர் தங்களது பணத்தை இழந்து வண்ணம்தான் உள்ளனர்.

அந்த வகையில், வேலையில்லாத ஆண்களை குறி வைத்து பேஸ்புக் மூலம் ஒரு கும்பல் பணம் மோசடியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேஸ்புக்கில் பரவும் சில வீடியோக்களில் இளம்பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி,

மக்களே உஷார்.. தவறவிடும் ATM கார்டுகளை பயன்படுத்தி நூதன மோசடி - வங்கி ஊழியர் கைது!

மக்களே உஷார்.. தவறவிடும் ATM கார்டுகளை பயன்படுத்தி நூதன மோசடி - வங்கி ஊழியர் கைது!

கும்பல்

குழந்தைபேறு இல்லாத பெண்களை 3 மாதங்களுக்குள் கர்ப்பமாக்கும் ஆண்களுக்கு ரூ.20 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என ஆசை காட்டுகின்றனர். இதை பார்க்கு வேலையில்லா இளைஞர்கள் பண ஆசையில் அந்த வீடியோவில் இருக்கும் எண்களை தொடர்பு கொள்ளும் போது

வேலை வாய்ப்பு.. பெண்களை கர்ப்பமாக்கினால் 20 லட்சம் - இளைஞர்களை குறிவைக்கும் கும்பல்! | Cash For Making Women Pregnant Scam Lures Men

மோசடி காரர்கள் அவர்களிடம் ஆசையாக பேசி அழைப்பார்கள். அதாவது, பெண்களை சந்தித்து பாலியல் உறவு கொண்டு கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் கிடைக்கும். கர்ப்பம் தரிக்க முடியாவிட்டாலும் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என சொல்கின்றனர்.

இதற்கு அவர்கள் சம்மதித்தால் அடையாள அட்டைக்கு ரூ.999 கட்டணம் செலுத்த வேண்டும் என தொடங்கி ரூ.1 லட்சம் வரை பணத்தை கறக்கிறார்கள். பின்னர் தொடர்பு எண்ணை மாற்றி ஏமாற்றுகிறார்கள்.

இந்த நூதன மோசடியில் ஏராளமான இளைஞர்கள் பணத்தை இழந்துள்ளனர். எனவே இது போன்ற நூதன மோசடிகளில் சிக்காமல் சமூக வலைதள பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.