இது தான் ஆட்சியா?ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துகள் - மம்தா பானர்ஜி காட்டம்!
ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துகள் நடந்து வருவதாகவும் இதை எவ்வளவு காலம் இதை பொறுத்துக்கொள்ள போகிறோம் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்து
ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்றுஅதிகாலை 3.43 மணியளவில் மும்பை நோக்கிச் சென்ற மும்பை - ஹவுரா பயணிகள் ரயில் சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரெயிலின் 14 -பெட்டிகள் தடம் புரண்டன .
இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்தனர் மேலும் மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறையினர் ரயிலில் ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகிறனர்.
மம்தா பானர்ஜி
தொடர்ந்து 80% பயணிகள் அருகில் உள்ள சக்கரதர்பூர் ரயில் நிலையத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளோரை மீட்க ரயில் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரயில் விபத்து குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது : நான் சீரியசாக கேட்கிறேன் .. இது தான் ஆட்சியா? ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்தால் மரங்கள் ,படுகாயங்கள் நடக்கின்றனர்.
எவ்வளவு காலம் இதை நாள் பொறுத்துக்கொள்ள போகிறோம் . ஒன்றிய அரசின் லட்சியத்திற்கு ஒரு முடிவே இல்லையா ?என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.