தொடரும் ரயில் விபத்து - பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏன் ? - நவாஸ்கனி எம்.பி. விமர்சனம்

Smt Nirmala Sitharaman Budget 2024
By Vidhya Senthil Jul 24, 2024 07:35 AM GMT
Report

  புதிதாக நான்கு கோடி வேலைவாய்ப்பு என அறிவிக்கப்பட்டிருப்பது யாரை ஏமாற்றும் திட்டம். 

ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜக அரசின் அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளதாக நவாஸ்கனி எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.

தொடரும் ரயில் விபத்து - பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏன் ? - நவாஸ்கனி எம்.பி. விமர்சனம் | Navas Kani Mp Slams Finance Minister

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024-25, பாஜக அரசின் அரசியல் லாபத்திற்காக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பீகார் மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு மட்டும் சிறப்பு திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பான்மை மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

நிதிநிலை அறிக்கை

மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் இதுவரை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில் பெயரளவிலாவது தமிழும், தமிழ்நாடும் இடம்பெறும். அதனைக் கூட இன்றைய நிதிநிலை அறிக்கையில் தவிர்த்து இருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர்.

மத்திய பட்ஜெட் 2024-ல் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை - செல்வப்பெருந்தகை!

மத்திய பட்ஜெட் 2024-ல் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை - செல்வப்பெருந்தகை!

மேற்கோள் காட்டுவதற்காக வழக்கமாக பயன்படுத்தப்படும் திருக்குறள் உட்பட அனைத்தையும் தவிர்த்து இருக்கிறார் நிதியமைச்சர். இயற்கை சீற்றங்கள், தமிழகத்திற்கான நிலுவை நிதி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலுக்கான நிதி உட்பட பல்வேறு தேவைகள் தமிழ்நாட்டிற்கு இருந்தும் எதுவும் குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

எந்த அறிவிப்பும் இல்லாமல் ஏமாற்றம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. நிதிநிலை அறிக்கையில் நான்கு கோடி வேலை வாய்ப்புகள் என கவர்ச்சிகரமான அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

தொடரும் ரயில் விபத்து - பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏன் ? - நவாஸ்கனி எம்.பி. விமர்சனம் | Navas Kani Mp Slams Finance Minister

 பாஜக 

ஏற்கனவே 2014 ல் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என பாஜக அறிவித்த அறிவிப்பே என்ன ஆனது என நிலை அறியாது இருக்கும் பொழுது, புதிதாக நான்கு கோடி வேலைவாய்ப்பு என அறிவிக்கப்பட்டிருப்பது யாரை ஏமாற்றும் திட்டம்.

தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நாடெங்கும் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரயில்வே குறித்து ஒரு வரி கூட குறிப்பிடாதது எந்த வகையில் நியாயம். வழக்கம்போல சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்கும் இந்த பட்ஜெட்டின் மூலம் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது பாஜக அரசு.

இந்த நிதிநிலை அறிக்கை பாஜக அரசின் ஆட்சியை பாதுகாக்கும் அரசியலை வெளிப்படுத்துகிறதே தவிர, நாட்டு நலனையும், நாட்டு மக்களின் நலனையும் முன்னிறுத்தவில்லை. தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜகவை, தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து புறக்கணிப்பார்கள் என்று எம்பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.