57 நாட்கள் விசாரணை ரிப்போர்ட் எங்க? தீர்ப்பில் எனக்குத் திருப்தி இல்லை - மம்தா முடிவால் அதிர்ந்த CBI!
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிராக மம்தா பானர்ஜி மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கொலை வழக்கு
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9 தேதி மருத்துவமனை செமினார் அறையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தது.இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு 45 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில் சஞ்சய் ராய் செமினார் அறையில் காலை 4 மணிக்கு உள்ளே செல்வதும் பிறகு 30 நிமிடங்கள் கழித்து வெளியே வருவது,
பெண் பயிற்சி மருத்துவர் நகத்திலிருந்த ரத்தம் மற்றும் திசுக்களின் மாதிரிகள் சஞ்சய் ராயின் டி.என்.ஏ.வுடன் ஒத்துப்போகிறது எனத் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்து இருந்தனர்.இதனையடுத்து விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்றது.
தீர்ப்பு
இந்த நிலையில் , சீல்டாவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் சஞ்சய் ராய்க்கு ரூ.50,000 அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில்,நீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு மாநில காவல்துறையிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி CBI வசம் தரப்பட்டது. நாங்களே விசாரணை செய்து இருந்தால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனையை உறுதி செய்து இருப்போம்.
விசாரணை மற்றும் நீதிமன்ற தீர்ப்பில் எனக்குத் திருப்தி இல்லை.தொடர்ந்து ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.