எதற்கு இந்த புதிய பீர் அறிமுகம்? குடிமகன்கள் விருப்பம் - அமைச்சர் முத்துசாமி விளக்கம்!
புதிய பீர் அறிமுகம் குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.
புதிய பீர்
கோவையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி பணிகளை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,
மது பார் டெண்டர், அரசு விரும்பி கோருவதில்லை. மதுபானம் வாங்குவோர், அமர்ந்து சாப்பிட இடமில்லாமல் ரோட்டில் நிற்கின்றனர்; வயலுக்கு போகின்றனர். இது போன்ற தவறு நடக்காமல் இருக்க பார் நடைமுறை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் விளக்கம்
பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள், பாதிப்பு இல்லாத பகுதிகளுக்கு மாற்றப்படுகின்றன. மதுபாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது ஒன்றிரண்டு இடங்களில் நடக்கிறது.
சட்ட விரோதமாக பார்கள் செயல்பட்டாலோ, மதுபானங்கள் விற்றாலோ சீல் வைக்கப்படும். ஒரே ரக மதுபானங்கள் கொடுக்கும் போது, ஏன் ஒரே ரகத்தை மட்டும் கொடுக்கிறீர்கள்; மற்ற ரகம் தருவதில்லை.
இதில், உள்நோக்கம் இருக்கிறதா என கேட்கின்றனர்.
என்னென்ன ரகம் வருகிறதோ, குடிமகன்கள் விரும்பும் போது கொடுக்கிறோம். அதே நேரம், மதுப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.