+2 பொதுத்தேர்வில் முறைகேடு.. ஒரே கையெழுத்தில் இருந்த விடைத்தாள்கள் - மாணவர்கள் அதிர்ச்சி!
சமீபத்தில் +2 மாணவர்கள் பொதுத்தேர்வு நடந்தது அதில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வு
இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபட்டறது. பின்னர் ஏப்ரல் 5ம் தேதி விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கியது, தற்பொழுது மதுரையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையம் ஒன்றில் திருத்தப்பட்ட இரண்டு மாணவர்களின் விடைத்தாளிலும் ஒரே கையெழுத்து இருந்தது தெரியவந்தது.
மேலும் இருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தது அதிர்ச்சிக்குள்ளானது. இதனால் சந்தேகமடைந்த தேர்வுத்துறையினர், விசாரணை நடத்தினார், அதில் அந்த இரண்டு மாணவர்களும் அடுத்தடுத்த பதிவெண் என்பதும் தெரியவந்தது.
குழப்பம்
இந்நிலையில், அவர்கள் இருவரும் வேதியல், இயற்பியல் உள்ளிட்ட 3 பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றதும் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது. தொடர்ந்து, விடைத்தாள் கலக்கும் பணியின் போது விடைத்தாள்களை மாற்றியிருக்கலாம் என்ற அடிப்படையில்,
நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள், தேர்வின் போது கண்காணிப்பு பணியாற்றிய ஆசிரியர்கள், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், விடைத்தாள் திருத்தும் முகாமில் விடைத்தாளை கலக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், ஆய்வக உதவியாளர்கள் என 15க்கும் மேற்பட்டோர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஆசிரியர்களுக்கு இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் நேர்மையாக எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.