அடுத்த வருஷம் மோடி வீட்டில்தான் கொடியேற்றுவார் - கார்கே காட்டம்!
அடுத்தாண்டு பிரதமர் வீட்டில் கொடியேற்றுவார் என்று கார்கே கூறியுள்ளார்.
சுதந்திர தின விழா
டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 10 -வது முறையாக தேசிய கொடி ஏற்றினார். பின்னர், "அடுத்த ஆண்டு இதே செங்கோட்டையில் நின்று நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிடுவேன்.
மேலும், உங்கள் வலிமை, உறுதி மற்றும் வெற்றிக்காக அதிக நம்பிக்கையுடன் போராடுங்கள் என வலியுறுத்துவேன்" என்று தெரிவித்திருந்திருந்தார்.
கார்கே விமர்சனம்
அதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "உங்களது வெற்றியோ தோல்வியோ அது மக்களின் கையில், வாக்காளர்களின் கையில் உள்ளது.
2024-ல் மீண்டும் ஒரு முறை செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்று இப்போதே கூறுவது ஆணவம். அடுத்த ஆண்டு அவர் மீண்டும் ஒருமுறை தேசிய கொடியை ஏற்றுவார். அதை அவர் அவரது வீட்டில் செய்வார்" எனத் தெரிவித்துள்ளார்.