மதிமுகவில் இருந்து நீக்கம்; எதிர்பார்த்ததுதான்.. மல்லை சத்யா விளக்கம்!

Vaiko Tamil nadu
By Sumathi Sep 08, 2025 06:28 AM GMT
Report

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டுள்ளார்.

மதிமுகவில் நீக்கம்

மதிமுக துணை பொதுச்செயலாளராக செயல்பட்டவர் மல்லை சத்யா. மதிமுக முதன்மை செயலாளராக துரை வைகோ பதவியேற்றதை தொடர்ந்து,

mallai sathya - vaiko

மல்லை சத்யாவுக்கும் பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இதனால் வைகோவுக்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் மல்லை சத்யா கடந்த மாதம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும், மல்லை சத்யாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கிய இபிஎஸ் - செங்கோட்டையன் சொன்ன பதில்

கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கிய இபிஎஸ் - செங்கோட்டையன் சொன்ன பதில்

மல்லை சத்யா விளக்கம்

அதன்படி, வைகோவுக்கு மல்லை சத்யா விளக்க கடிதம் அனுப்பினார். ஆனால், அந்த விளக்கத்தில் திருப்தி இல்லை எனக்கூற மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுகவில் இருந்து நீக்கம்; எதிர்பார்த்ததுதான்.. மல்லை சத்யா விளக்கம்! | Mallai Sathya Expelled From Mdmk Reason

இதுகுறித்து மல்லை சத்யா பேசுகையில், ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார். என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். துரை வைகோ வருகைக்குப்பின் மதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது.

தனது மகன் துரை வைகோ குறித்தே வைகோ சிந்திக்கிறார். ஆதரவாளர்களை அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்தித்து ஜனநாயகபூர்வமாக பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.