பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் இனி அளவு எடுக்கக்கூடாது - மகளிர் ஆணையம்

Uttar Pradesh Crime Women
By Sumathi Nov 08, 2024 12:00 PM GMT
Report

பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் இனி அளவு எடுக்கக்கூடாது என மகளிர் ஆனையம் பரிந்துரை செய்துள்ளது.

மகளிர் ஆனையம் 

உத்தர பிரதேசம், மகளிர் ஆணைய உறுப்பினர்கள் லக்னோவில் ஆலோசனை நடத்தினர். அதில், பெண்கள் பாதுகாப்பிற்காக நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

gym

அதன் அடிப்படையில், பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது. ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்கக்கூடாது.

இலவச தையல் இயந்திரம்; மத்திய அரசு திட்டம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

இலவச தையல் இயந்திரம்; மத்திய அரசு திட்டம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

புதிய பரிந்துரைகள்

முடி திருத்தும் கடைகளில் பெண்களுக்கு பெண்கள் முடி திருத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களை கெட்ட தொடுதலில் இருந்து பாதுகாக்கவும்,

பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் இனி அளவு எடுக்கக்கூடாது - மகளிர் ஆணையம் | Male Tailors No Longer Take Sizes For Women Up

ஆண்களின் தவறான எண்ணங்களை தடுக்கவும் இந்த பரிந்துரைகள் வழிவகுக்கும். இது ஒரு முன்மொழிவு மட்டுமே. இது தொடர்பாக சட்டங்களை உருவாக்குமாறு மகளிர் ஆணையம் மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.