இலவச தையல் இயந்திரம்; மத்திய அரசு திட்டம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா?
தையல் இயந்திரம்
பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் வாங்க ரூ.15,000 மத்திய அரசு தருகிறது.
இந்தப் பணம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதற்கு பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் விண்ணப்பிக்கலாம். இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே தையல் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, முகவரிச் சான்று, அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் எண், வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். https://pmvishwakarma.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் திட்டத்திற்கு பதிவு செய்யலாம்.
மேலும், அருகிலுள்ள CSC மையத்திற்குச் சென்றும் செய்துக் கொள்ளலாம்.
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, ஒப்புதல் கிடைக்கும். அதன்பின் பணம் கிடைக்கும் என அரசு தகவல் தெரிவித்துள்ளது.