பெண்கள் கல்லூரிக்குள் ஏறிகுதித்த மாணவர்கள் - ஏன்.. பரபரப்பு வீடியோ!

Viral Video Delhi
By Sumathi Oct 17, 2022 05:38 AM GMT
Report

 பெண்கள் கல்லூரியில் மாணவர்கள் சிலர் சுவர் ஏறி குதித்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் கல்லூரி

டெல்லியில், மிராண்டா ஹவுஸ் எனும் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 14-ஆம் தேதி தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை முன்னிட்டு பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெண்கள் கல்லூரிக்குள் ஏறிகுதித்த மாணவர்கள் - ஏன்.. பரபரப்பு வீடியோ! | Male Students Illegal Entry At Girls College Delhi

இதில் மற்ற கல்லூரிகளை சேர்ந்தவர்களும் பங்குபெற அனுமதிக்கப்பட்டது. அப்போது, கூட்டம் அதிகரித்ததால் பெண்கள் கல்லூரியின் வாசல் மூடப்பட்டது. இந்நிலையில், ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பெண்கள் கல்லூரியின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர்.

மாணவர்கள் அத்துமீறல்

மேலும், சில மாணவர்கள் ஆபாசமாக பேசி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்ந்து, இதுகுறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.