நள்ளிரவில் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பகீர் சம்பவம்!

Chennai Sexual harassment Crime
By Sumathi Sep 27, 2022 03:30 PM GMT
Report

விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பாலியல் தொல்லை

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதிக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கு உறங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

நள்ளிரவில் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பகீர் சம்பவம்! | Youth Arrested Sexually Harassing College Girls

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் சத்தமிட்டதையடுத்து இளைஞர் தப்பிச் சென்றார். தொடர்ந்து விட்டுச் சென்ற செல்போனை எடுக்க இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் பெண்கள் விடுதிக்குள் நுழைந்த அந்த இளைஞரை மாணவிகள் பிடித்து உதைத்து கீழ்ப்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பெண்கள் விடுதி

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்(22) என்பதும், இவர் எம்எம்சி கல்லூரியில் அனஸ்தீஸியா கிரிட்டிகல் கேர் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார்.

நள்ளிரவில் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பகீர் சம்பவம்! | Youth Arrested Sexually Harassing College Girls

தற்போது அவர் சேத்துப்பட்டு நவரோஜி சாலையில் உள்ள கந்தசாமி ஆண்கள் விடுதியில் தங்கி தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒன்றரை வருடங்களாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

தொடர்ந்து, ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, கீழ்பாக்கம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.