14 குட்டிகளை பெற்றெடுத்த ஆண் பாம்பு...அதுவும் இணைசேர்க்கை செய்யாமலே - அது எப்படி ?
ஆண் பாம்பு ஒன்று இனச்சேர்க்கை செய்யாமல் 14 குட்டிகளை பெற்றெடுத்துள்ளது.
ஆண் பாம்பு...
இங்கிலாந்தில் உள்ள சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் 13 வயதுடைய விஷமற்ற போவா வகை பாம்பு வளர்க்கப்படுகிறது. இதனை பராமரித்து வந்த விலங்கு பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர், இந்த பாம்பை ஆண் என கருதி அதற்கு ரொனால்டோ என்று பெயர் சூட்டியுள்ளார்.
சுமார் 9 ஆண்டுகள் அதை தனித்து வைத்து பராமரித்து வந்தார். எனவே மற்ற பாம்புகளுடன் சேர வாய்ப்பில்லை. இந்த நிலையில், திடீரென ரொனால்டோ குட்டிகளை பிரசவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் ஒரு ஆண் பாம்பு எவ்வித இனச்சேர்க்கையும் இல்லாமல் எப்படி குட்டிகளை ஈன்றிருக்க முடியும் என்று அவருக்கு குழப்பம் ஏற்பட்டது.
அது எப்படி ?
வல்லுநர் பொறுத்தவரை ரொனால்டோ அண்மையில் ஒரு பெரிய இரையை உட்கொண்டதால் இயல்பை விட சற்று பருமனாக இருப்பதாக நினைத்துகொண்டுள்ளார். ஆனால் அது கர்ப்பமாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் நினைக்கவில்லை.
பொதுவாகவே பல பூச்சிகள் மற்றும் பிற முதுகெலும்பில்லாத உயிரினங்கள் பாலுறவு இல்லாமல் இனப்பெருக்கம் செய்ய முடியும். அவை இயற்கையான குளோனிங் முறையில் மரபணு ரீதியாக ஒரே மாதிரியான சந்ததிகளை உருவாக்குகின்றன.
இருப்பினும் தனியாக வைத்து இருந்த பாம்புகளில் ரொனால்டோவைபோல கர்ப்பமானது உலகில் இதுவே மூன்றாவது முறையாகும். தற்போது ரொனால்டோ குட்டிகளை ஈன்றுள்ளதால், அடுத்து எப்படி பராமரிக்கலாம் என்று வல்லுநர் யோசித்து வருகிறார்.