தன் துணையை கொன்றவரை 7 முறை கடித்து பழிவாங்கும் பெண் பாம்பு - படத்தை மிஞ்சும் உண்மைச் சம்பவம்

7-times-vengeful female-snake 7முறைகடித்து பழிவாங்கும்பெண்பாம்பு உண்மைச்சம்பவம்
By Nandhini Apr 19, 2022 08:16 AM GMT
Report

உத்தரபிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டம், மிர்சாபூரைச் சேர்ந்தவர் எஹ்சான். இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் வீட்டு அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த போது 2 பாம்புகளை பார்த்துள்ளார். அந்த 2 பாம்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து, பிணைந்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த எஹ்சான், அப்பாம்புகளை அடித்தார்.

அப்போது, பெண் பாம்பு ஒன்று தப்பி ஓடிவிட்டது. ஆனால், ஆண் பாம்பு எஹ்சானிடம் மாட்டிக்கொண்டது. அப்போது, எஹ்சான் அந்த ஆண் பாம்பை அடித்து கொன்றுவிட்டார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எஹ்சான் வீட்டில் இருந்தபோது பெண் பாம்பு ஒன்று அவரைத் தேடி வந்து கடித்தது. இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் தப்பினார்.

ஆனால், அதே பெண் பாம்பு மீண்டும் திரும்பி வந்து அவரை மீண்டும் மீண்டும் கடித்துள்ளது. மொத்தம் 7 முறை எஹ்சானை அந்த பெண் பாம்பு கடித்திருக்கிறது.

அக்கம்பக்கத்தினர் தான் அவரது உயிரைக் காப்பாற்றி வருகிறார்கள். அந்த பெண் பாம்பு 7 முறை கடித்த பிறகுதான் எஹ்சானுக்கு பாம்பை கொன்றது நினைவுக்கு வந்துள்ளது.

இது குறித்து எஹ்சான் கூறுகையில், பழிவாங்கும் நோக்கில் அந்த பெண் பாம்பு என்னை மீண்டும் மீண்டும் கடிக்கிறது’ என்றார்.

பல வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் ‘நீயா’ படம் வெளியானது. அதே பாணியில் பெண் பாம்பு ஒன்று பழிவாங்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தன் துணையை கொன்றவரை 7 முறை கடித்து பழிவாங்கும் பெண் பாம்பு - படத்தை மிஞ்சும் உண்மைச் சம்பவம் | 7 Times Vengeful Female Snake