அட கடவுளே - ரோபோவுமா இப்படி..? பெண் நிருபரிடம் அத்துமீறிய ஆண் ரோபோட்..!
சவுதி அரேபியா நாட்டில் ஆண் ரோபோட் ஒன்று பெண் நிருபரிடம் அத்துமீறியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பெண் பாதுகாப்பு
இன்று பெண்கள் தினத்தை கொண்டாடும் அதே நேரத்தில், பல இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை நாம் கண்டு கொண்டே தான் இருக்கின்றோம்.
அதற்கு மிக சமீபத்திய உதாரணம், ஸ்பெயின் நாடு பெண்ணிற்கு ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கொடுமை, புதுச்சேரியில் 9 வயது குழந்தைக்கு ஏற்பட்ட நிலை என கடந்த சில நாட்களில் மட்டும் பல இது போன்ற செய்திகள் தேசிய அளவில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி, இது பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து நடைபெற்று கொண்டே தான் இருக்கின்றது. தொடர்ந்து ஆண்களால் பெண்ணிற்கு பாதுகாப்பற்ற சமுதாயமே உருவாகின்றது என்றே கூக்குரல் எழுப்பப்பட்டும் வருகின்றது.
ரோபோவும்...
இதில், தற்போது மேலும் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக பெண் நிருபர் ஒருவருக்கு ஆண் ரோபோட் செய்த காரியம் அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சவுதி அரேபியா நாட்டின் முதல் ஆண் ரோபோ முஹம்மது, ஒரு லைவ் நிகழ்வில் ஒரு பெண் நிருபரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளது.
Saudi Arabia unveils its man shaped AI robot Mohammad, reacts to reporter in its first appearance pic.twitter.com/1ktlUlGBs1
— Megh Updates ?™ (@MeghUpdates) March 6, 2024
இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி ரோபோவின் செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாகச் சாடியுள்ளனர். அந்த பெண் நிருபர் ரோபோ குறித்துப் பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த ரோபோ திடீரென பெண்ணை நோக்கி தனது கையை தூக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.