இன்று சர்வதேச மகளிர் தினம் - எதனால் மார்ச் 8 வந்தது..? 1908-இல் நடந்த போராட்டம் தெரியுமா..?

International Women's Day
By Karthick Mar 08, 2024 02:16 AM GMT
Report

மார்ச் 8 இன்று சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

பெண்கள்

ஆண்கள் சமுதாயத்தின் ஆதிக்கமாக இருந்த போதிலும், பெண்களுக்கான சமஉரிமைகளும், சமவாய்ப்புகளும் வழங்கப்படவேண்டும் என பல்வேறு நாடுகளும், பல்வேறு தலைவர்களும் மேற்கொண்ட போராட்டங்களின் முன்னேற்றம் தான் நமது தாய், சகோதரி, தாரம் என பலரும் முன்னேறி நாட்டின் முக்கிய பங்காக திகழ்கிறார்கள்.

why-we-are-celebrating-womens-day-in-march-8th

அவர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இது கொண்டாடுவது சரி, ஆனால் எதனால் இந்த தேதி மையப்படுத்தப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா..? 

தெய்வம் தந்த பூவே; சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று - வீட்டிலிருந்து தொடங்கட்டும்!

தெய்வம் தந்த பூவே; சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று - வீட்டிலிருந்து தொடங்கட்டும்!

1908 இல்  

ரு நூற்றாண்டிற்கு முன்பாக, சரியாக 1908 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல்வேறு கார்மெண்ட்ஸில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் நல்ல ஊதியம் மற்றும் குறைவான வேலை நேரம் போன்றவற்றுடன் தங்களுக்கும் ஓட்டு போடும் உரிமை வேண்டும் என கோரிக்கை வைத்து வீதிகளில் இறங்கி நடைபயணம் மேற்கொண்டு போராடினர்.

why-we-are-celebrating-womens-day-in-march-8th

இது தான் பின்நாளில் சர்வதேச பெண்கள் தினம் அமைய அடிப்படையானது. மார்ச் 1911 ஆம் ஆண்டுகளில் இருந்து யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மகளிர் தினம் கொண்டப்பட்டாலும், 1975-ஆம் ஆண்டில் தான் யுனைடெட் நேஷன்ஸ் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நோக்கத்தை கொண்டும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

why-we-are-celebrating-womens-day-in-march-8th

அந்த வகையில் இந்த ஆண்டு, "பெண்களில் முதலீடு செய்க: முன்னேற்றத்தை விரைவுப்படுத்துக அதாவது Invest in Women: Accelerate Progress,’ targeting economic disempowerment என்ற கருப்பொருளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.