இரவு பார்ட்டி - ஆண் நண்பர் அளித்த பரிசு!! 37-வது பிறந்தநாளில் பூரிப்புடன் சமந்தா

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகர் சமந்தா தனது பிறந்தநாளை கடந்த 28-ஆம் தேதி கொண்டாடினார்.
சமந்தா
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வலம் வந்தவர் நடிகை சமந்தா. தெலுங்கிலும் கலக்கி வருகிறார்.
நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர்.
விவாகரத்து பிறகும் தொடர்ந்து சினிமாவில் பட்டையை கிளப்பினார். சிறிது காலமாகவே மையோசிட்டிஸ் நோய்யால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அந்த பாதிப்பில் இருந்து போராடி மீண்டு வந்துள்ள சமந்தா, தற்போது ஹிந்தியில் உருவாகியுள்ள "Citadel" வெப் சீரிஸ்-இல் நடித்துள்ளார். இவர் பிறந்தநாளை கடந்த 28-ஆம் தேதி கொண்டாடினார்.
ரசிகர்கள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள புதிய பட அறிவிப்பும் வெளியிடப்பட்டது. பங்காரம் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை சமந்தாவே தயாரிக்கிறார்.
இந்நிலையில், தனது 37-வது பிறந்தநாளை அவர் தனது நண்பர்களுடன் கொண்டாடி உள்ளார். பிறந்த நாள் பரிசாக ஆண் நண்பர் அளித்த செயின் ஒன்றை கழுத்தில் அணிந்து இருக்கும் புகைப்படத்தையும் சமந்தா பகிர்ந்துள்ளார்.